×

அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை நள்ளிரவும் நகைக்கடைகள் திறப்பு

* முன்பதிவு40 சதவீதம் அதிகரிப்பு
* நகை வியாபாரிகள்தகவல்

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை நள்ளிரவும் நகைக்கடைகள் திறக்கப்படும். நகை முன்பதிவு 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும்  செல்வ செழிப்போடு வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதன்படி இந்தாண்டு அட்சய திருதியை 7ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.27 மணிக்கு தொடங்கி புதன் அதிகாலை 2.37 மணி வரை இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய  நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் 7ம் தேதி நள்ளிரவு வரை திறக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடிய, விடிய அட்சய திருதியை நடப்பதால் மாநிலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடும்  செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகைக்கடைகள் அதிகமாக உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்ைட, போரூர், பாடி உள்ளிட்ட பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:அட்சய திருதியை முன்னிட்டு 7ம் தேதி இரவு நகைக்கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்சய திருதியைக்காக புது, புது  டிசைன்களில் ஏராளமான நகைகள் விற்பனைக்காக வந்துள்ளது. சிறந்த கைவினைஞர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட “டெம்பிள் ஜூவல்லர்ஸ்க்கு” அதிக வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலால் தேர்தல் நடத்தை  விதிமுறை அமலில் இருந்தது. இதனால், கடந்த 55 நாட்களாக பணப்புழக்கம் என்பது குறைந்திருந்தது. விற்பனையும் சற்று குறைந்திருந்தது. இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. தங்கம் விலையும் குறைந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்பதிவு 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல்  திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் வருகிறது. இதனால், அட்சய திருதியை அன்று விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,jewelery , Tiruchi, Tamil Nadu, tomorrow, jewelry, midnight
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு