×

தமிழகத்தில் 7-ம் தேதி முதல் ரமலான் நோன்பு: தமிழக தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். இன்று ரமலான் பிறை தென்படதை அடுத்து இந்த அறிவிப்பை தலைமை காஜி அறிவித்துள்ளார். வளைகுடா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது. ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை உணர்த்தி, பசித்தவருக்கு அன்னமிடும் நற்பண்பை செல்வந்தர்களுக்கு உணர்த்தவும், பசியின் கொடுமையை செல்வந்தர்களும் அனுபவித்து உணர்ந்து, தான- தர்மங்களை தொடரவும் இஸ்லாத்தில் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலையில் முதல் நோன்பினை முஸ்லிம்கள் கடைபிடிக்கின்றனர். அதிகாலையில் எழுந்து, “ஸஹர்” எனப்படும் கதிரவனின் உதய வேளை முடிவதற்குள் சாப்பிட்டு முடித்தபின், “மஹ்ரிப்” எனப்படும் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 14 மணி நேரம் ஒருதுளி நீரைக்கூட பருகாமல் உடலை வருத்தி, படைத்தவனை நினைத்து, அவனை ஐந்து வேளையும் வணங்கியவர்களாய் மாதத்தின் 30 நாட்களையும் கழிப்பதே ரமலான் நோன்பின் சிறப்பாகும். அவ்வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோன்பு வரும் 7-ம் தேதி அதிகாலை ஸஹருடன் தொடங்குவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி இன்றிரவு அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramanan ,Tamilnadu , Ramadhan fast, Tamilnadu Chief Gaji, Muslims,
× RELATED 450 கோடி முறை பெண்கள் இலவச பஸ் பயணம்:...