ஐபிஎல் டி20: சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி

மொகாலி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன்  அஸ்வின் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து  களமிறங்கிய சென்னை  அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. டூப்ளெசி-96, ரெய்னா-53 ரன்கள் எடுத்து விளாசல். இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இறுதியில் பஞ்சாப் அணி 18 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 71 ரன்களும், பூரான் 36 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Punjab ,India , IPL, Chennai, Punjab team
× RELATED திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி...