×

குவைத்தில் வேலைக்கு சென்ற பெண்ணுக்கு சித்ரவதை மனைவியை மீட்கக்கோரி எஸ்பி ஆபீசில் கணவன் மனு

ஈரோடு: குவைத் நாட்டில் வேலைக்கு சென்ற பெண்ணை முதலாளியின் குடும்பத்தினர் அடித்து சித்ரவதை செய்வதாக வாட்ஸ்அப் வீடியோ காலில் தகவல் தெரிவித்ததால் அவரை மீட்டு தரக்கோரி கணவர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். ஈரோடு  கருங்கல்பாளையம் கேஏஎஸ் நகர் மரப்பாலம் ரோட்டை சேர்ந்தவர் நவாஸ்கான்(48).  இவரது மனைவி யாஸ்மீன்(45). இவர்களுக்கு சமீன்(29) என்ற மகளும்,  நாஜிரூல்லா(28) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நவாஸ்கான் அவரது மகள்  சமீன் ஆகியோர் நேற்று காலை ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சக்தி கணேசனிடம்  புகார் மனு அளித்தனர். அதில் நவாஸ்கான் தெரிவித்துள்ளதாவது:

எனது  மனைவி யாஸ்மீனை வீட்டு வேலைக்காக கடந்த ஜனவரி 11ம் தேதி குவைத்  நாட்டிற்கு எனது அக்கா மகன் நிஜாமின் பரிந்துரையின் பேரில் அழைத்து  செல்லப்பட்டார். நான்கு மாதமாக குவைத் நாட்டில் இருக்கிறார். நேற்று முன்தினம் யாஸ்மீன் என்னை ‘வீடியோ காலில்’ தொடர்பு கொண்டார். அப்போது முதலாளியின் குடும்பத்தினர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், கொதிக்கும் தண்ணீரை கையில்  ஊற்றி சித்ரவதை செய்வதாகவும், வேலை பார்த்ததற்கு சம்பளம் கேட்டால், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடித்து  உதைப்பதாகவும், இதனால் தன்னை காப்பாற்றும்படி கூறி போனை துண்டித்து  விட்டார். எனவே, குவைத் நாட்டில் உள்ள என் மனைவியை மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rescuer ,Office ,SP ,Kuwait , Husbands petition , SP Office,rescuer of a woman , work in Kuwait
× RELATED கன்னியாகுமரி அருகே கர்பிணிப்...