×

ஆற்காடு அருகே மணல் கடத்தலை தடுத்ததால் வருவாய்த்துறையினரை கார் ஏற்றி கொல்ல முயற்சி

ஆற்காடு: மணல் கடத்தலை தடுத்த வருவாய் துறையினர்  மீது கார் ஏற்றி கொல்ல முயணுசி நடந்துள்ளது. வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் அருகே சொறையூர்  பகுதியில் உள்ள கமண்டல நாக நதியில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் மணல் ஏற்றிச் செல்வதாக ஆற்காடு தாசில்தார் வத்சலாவிற்கு  கடந்த 2ம் தேதி இரவு தகவல் கிடைத்தது.  அவரது உத்தரவின் பேரில் மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், விஏஓக்கள் விக்னேஸ்வரன் (சொறையூர்), கபிலன் (கே.வேளூர்), சரண்ராஜ் (வளவனூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் சொறையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் 2 லாரிகளில் மணல் ஏற்றிக் கொண்டு இருப்பதை கண்டு அங்கு சென்றனர். அதிகாரிகளை கண்டதும்  டிரைவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். பின்னர், அதிகாரிகள் அங்கு சோதனை செய்து  கொண்டிருந்தனர்.

இதற்கிடையே அங்கு காரில் கும்பல் ஒன்று வந்துள்ளது. வேகமாக அவர்கள் வருவாய் துறை அதிகாரிகள் மீது காரை ஏற்ற  முயன்றனர். அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போதும் விடாமல் அந்த கும்பல் கற்களை வீசி தாக்கியுள்ளனர். பின்னர் 2 லாரிகள் மற்றும் பொக்லைன்  இயந்திரத்தை  கடத்தல் கும்பல் மீட்டு சென்றுள்ளனர். வாழைப்பந்தல் போலீசில் நேற்று விஏஓ விக்னேஸ்வரன்  புகார் செய்தார்.  போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : revenue officials ,Arcot , Trying to kill, revenue officials, prevent sand smuggling near Arcot
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...