×

பேஷன் துறையில் அசத்தும் சவுதியின் முதல் பெண் மாடல்

துபாய்: கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதி அரேபியாவின் முதல் பெண் மாடல் தலிதா தாமெர் சர்வதேச அளவில் புகழ்பெற்று இத்துறையில் கலக்கி வருகிறார். சவுதி அரேபியா கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு. இங்கு  பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், தற்போதைய மன்னரின் உத்தரவுகளால், பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.இந்த சூழ்நிலையில், மாடல் துறையிலும் பெண்கள் களமிறங்க ஆரம்பித்துள்ளனர். சவுதி அரேபியாவின் முதல் பெண் மாடல் என்ற பெயரை பெற்றவர் தலிதா தாமெர். இவர் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் பிறந்து பிரிட்டீஷ்  கல்விக் கூடத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை அய்மான் தாமெர் பிரபல தொழிலதிபர். இவர் அழகுச் சாதன பொருட்களுக்கான நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது தாயார் கிறிஸ்டினா தாமெர், இத்தாலியின் பிரபல  நடன கலைஞர். இவரும் பேஷன் துறையில் ஆர்வமுடையவர்.

இவரின் பெற்றோர்கள் இந்த பேஷன் துறை சார்ந்த தொழில்களில் இருந்ததால், இவருக்கு இத்துறை மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. சவுதி அரேபியாவின் முதல் மாடல் என்ற அடையாளத்தால் சர்வதேச அளவில் வேகமாக புகழ்  பெற்றார். நியூயார்க்கில் இருந்து வெளியாகும் ஹார்பர் பஜார் இதழில் அட்டைப்படமாக வெளியாகிய பின் மாடலாக பிரபலமடைந்தார். பாரீசில் நடைபெற்ற பேசன் ஷோவில் சவுதி அரேபியாவின் முதல் மாடலாக‌ பங்கேற்று  கவனத்தை ஈர்த்தார். கட்டுபாடுகள் நிறைந்த சவுதி அரேபியாவில் இருந்து இவருக்கு சில விமர்சனங்கள் கிளம்பியது. இதற்கு பதிலளித்த இவர், இத்துறையில் நான் செயல்பட‌ தடைகள் நிறைய உள்ளன என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  ஆனாலும்  அனைவரின் கருத்துக்கும்  நான் மதிப்பளிப்பேன் என்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saudi , Fashion department, saudi, female model
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்