×

ஐடி கம்பெனி சிஇஓ பளீர் வேலை செய்யுங்க...இல்லே, போயிடுங்க!

பெங்களூரு: பிரபல சாப்ட்வேர் கம்பெனி காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார் பிரையன் ஹம்ப்ரீஸ். வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டுள்ள கம்பெனியை மீ்ண்டும் நிலை நிறுத்த அதிரடியாக இறங்கியுள்ளார். பொறுப்பேற்ற சில நாளில் இரண்டு முக்கிய அதிரடி மாற்றங்களை செய்தார் பிரையன். நிறுவனத்தில் மிக முக்கிய அங்கம், டிஜிட்டல் பிசினஸ் பிரிவு. இதன் தலைவராக கடந்த 16 ஆண்டாக இருந்து வருபவர் கஜேன் கண்டையா.  இவரை மாற்றி விட்டு, மால்கம் பிராங்க் என்பவரை அமர்த்தினார் பிரையன். ‘டிஜிட்டல் தொழில்நுட்பம் தான் இப்போது கொடிகட்டிப்பறக்கிறது. டிஜிட்டல் பிசினசை பெருக்கினாலே கம்பெனியின் பிரச்னை பாதி நீங்கி விடும்.  இதை மால்கம் செய்து முடிப்பார்; அதற்கு ஊழியர்களிடம் பெரும் தொழில்நுட்ப திறமைகளை வளர்க்க வேண்டும்’ என்றார் பிரையன்.

 கம்பெனியின் வடஅமெரிக்க வர்த்தகத்தை கவனித்து வந்தவர் நிகேத் சக்ரவர்த்தி. இவருக்கு பதில் பிரசாத் சிந்தாமனேனி என்பவரை அமர்த்தினார் பிரையன்.  இவர் கம்பெனியின் பேங்கிங், பைனான்சியல் சேவைகளை  கவனிப்பார். ‘நாம் கம்பெனியை மீண்டும் நிமிர்த்தி விட முடியும். எப்படி? நம் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து, காலத்துக்கு ஏற்ப திறமைகளை காட்டி, அவர்களை திருப்திபடுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் எடுத்த  புராஜக்ட்களில் வெற்றி காண வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு ஊழியர்களிடமும் இருக்க வேண்டும். அதனால் தான், காலத்துக்கு ஏற்ப திறமையை வெளிக்காட்ட வேண்டும்; அதற்கான பயிற்சி பெற ஆர்வம் காட்ட வேண்டும்; இல்லாவிட்டால் கம்பெனியை விட்டு வெளியேறி விடுங்கள் என்று ெசால்கிறேன் என்று  வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக  ஒவ்வொரு ஊழியர்களுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.  இது ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : company ,Id ,CEO worker , IT Company, CEO Worker
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...