×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் அசரென்கா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றார். முதல் சுற்றில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் மோதிய அசரென்கா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 43 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் ஆஷ்லி பார்தி (ஆஸி.), ஸ்வெட்லனா  கஸ்னட்சோவா (ரஷ்யா), அனஸ்டேசியா செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : round , Madrid Open Tennis, Azarenka
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா