×

விஜிஎன் கட்டிட நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை : சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: தமிழகத்தில் பிரபலமான கட்டிட நிறுவனங்களில் ஒன்றான விஜிஎன் பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் கடந்த 2013ல் கிண்டியில் உள்ள இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்தின் இடத்தை ரூ.272 கோடிக்கு ஏலம் எடுத்தது. அந்த இடத்தில் விஜிஎன் 1600 அடுக்குமாடி குடியிருப்புகளைக்கொண்ட கட்டிடங்களை கட்டத்தொடங்கியது. முதல்கட்டமாக 500 அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 2015ல் கட்டப்பட்டன. இந்நிலையில், இந்துஸ்தான் டெலிபிரிண்டர்சிடம் இருந்து இடத்தை வாங்கியதில் கூட்டுச்சதி நடைபெற்று அதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.115 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ ஸ்டேட் பாங்க் துணை பொது மேலாளர் லியோன் தெரட்டில் (ஐதராபாத்), தலைமை மேலாளர் என்.ராமதாஸ் (ெபங்களூர்), இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் தலைமை அதிகாரி டி.பி.குப்தா, விஜிஎன் நிர்வாக இயக்குநர் வி.பிரதிஷ் தேவதாஸ், விஜிஎன் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஜவஹர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் அதனால் வழக்கை முடித்துவைக்கலாம் என்றும் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.  வழக்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, விஜிஎன் நிறுவனத்தின் அடுத்த கட்டிடப் பணிக்கு இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. விஜிஎன் நிறுவனத்திடம் வீடுகளை வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட வங்கி கடன் சிக்கலும் தீர்ந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,CBI , allegations , VGN building ,not been proven,case was completed,CBI court
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...