×

மெரினா கடற்கரை கடைகளில் போலி வலம்புரி சங்கு விற்ற 3 பேர் கைது

சென்னை: தடை செய்யப்பட்ட அரியவகை வலம்புரி மற்றும் மாட்டு சங்குகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த மூவரை, மத்திய வன குற்றப்பிரிவினர் கைது செய்து அவர்களிடமிருந்து 136 சங்குகளை பறிமுதல் செய்தனர். மெரினா கடற்கரை பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் அரியவகை சங்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எழும்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் வனவிலங்கு குற்றத் தடுப்புவியல் துறை அதிகாரிகள் நேற்று மெரினா கடற்கரையில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட சங்குகள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதுதொடர்பாக, பழைய வண்ணாரப்பேட்டை, பாலசுப்பிரமணியன் தெருவை சேர்ந்த அம்சத்கான் (39), மேடவாக்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த துரைராஜ் (41), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (20) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கடையின் உரிமையாளர் ராஜசேகரன் (35) என்பவரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 136க்கும் மேற்பட்ட அரியவகை சங்குகளை பறிமுதல் செய்தனர்.  மேலும் விசாரணையில், அரிய வகை வலம்புரி சங்கை, சுண்ணாம்புக்கல் மூலம் போலியாக தயாரித்துள்ளனர்.  அதனை ₹10 ஆயிரத்துக்கு பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோன்று வன குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று சுமார் 28 கிலோ மதிப்புள்ள அரியவகை பவளப்பாறைகளை கள்ளத்தனமாக விற்பனை செய்த இருவரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marina beach ,shops , arrested , fake copper candy
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...