×

ஆக்டிங் இன்ஸ்பெக்டராக கலக்கும் பெண் ஏட்டு

மலைக்கோட்டை: மலைக்கோட்டை மாநகரின் மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் ஏட்டு படு தில்லாலங்கடியாக உள்ளார். காதல் ஜோடி, கள்ளக்காதல் பிரச்னை ஆகியவற்றில் கணிசமான  தொகையை கறந்து வருகிறார்இன்ஸ்பெக்டரிடம் நெருக்கமாக இருப்பதால் சக போலீசார் பேசவே அச்சப்படுகின்றனர். இதில் காதல் ஜோடி என வந்துவிட்டால் படு குஷிதான், நிர்ணயித்த வசூலை ஒரு பைசா குறையாமல்  வசூலிப்பதில் கில்லாடி. இன்ஸ்பெக்டர் பந்தோபஸ்த் டூட்டி அல்லது விடுமுறை என்றால் இவர் தான் ஆக்டிங் இன்ஸ்பெக்டர் போல் தோரணையாக அதட்டி மிரட்டி பேசுவார்.

புகார் கொடுத்தவர்களே மிரளும் வகையில் இவரின்  பேச்சு இருக்கும். அனைத்து வகையிலும் இவரின் டீலிங், புரோக்கர் மூலம் நடப்பதால் படு ரகசியமாக உள்ளது. பெண் ஏட்டுவை கண்டாலே காவல் நிலையத்தில் உள்ள சக பெண் போலீசார் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி  செல்கின்றனர். இதுவே இவருக்கு கிடைத்த வெற்றியாக உள்ளது. இவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வரும் போலீசார் பொறி வைத்து பிடிக்க கங்கணம் கட்டி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Acting Inspector , Acting inspector, female lady
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...