×

முன்ஜாமீன் பெற்றவர்களை மிரட்டிய இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: முன்ஜாமீன் பெற்றவர்களை மிரட்டிய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரருக்கு ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய ம்  உத்தரவிட்டுள்ளது.  சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் மீதும், குடும்பத்தினர் மீதும் கடந்த 2014ம் ஆண்டு விருகம்பாக்கம் போலீசார் 6 பிரிவுகளில் பொய் வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கில் நாங்கள் முன்ஜாமீன் பெற்றோம். இதை அறிந்த அப்போதைய விருகம்பாக்கம்  இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் போலீஸ் நிலையத்தில் சரண் அடையாமல் ஏன் முன்ஜாமீன் பெற்றீர்கள் என்று கேட்டு மிரட்டினார். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட  சென்றோம்.

அப்போது அங்கு சாதாரண உடையில் வந்த இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் என்னையும், எனது மனைவி, மகன் ஆகியோரையும் தகாத  வார்த்தைகளால் திட்டி தாக்கினர். பின்னர், எங்களை காரில் கடத்தி செல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து  வந்து திருச்சி கன்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. எனவே, இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் உள்பட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்ைக விசாரித்த நீதிபதி, சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் உள்பட 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம்  அபராதம் விதிக்கப்படுகிறது. ேமலும் இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு 4 வாரத்துக்குள் வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயும், மற்ற இருவரிடம் இருந்து தலா ₹50 ஆயிரமும் வசூலித்துக்  கொள்ளலாம். மேலும், அவர்கள் 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : inspector ,Muniyan , Preliminary, Inspector, Penalty, Human Rights Commission
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு