×

மது கொடுத்து இளம்பெண் பலாத்காரம்: கைது செய்யப்பட்ட வாலிபர்களின் செல்போன்களில் ஆபாச வீடியோ

சேலம்: சேலத்தில் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்களின் செல்போன்களில், ஆபாச வீடியோக்கள் இருப்பதால், மேலும் பல பெண்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனரா என போலீ சார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் சாந்தி (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாத்தாவை உடன் இருந்து கவனித்து வந்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதமாக இருவரும் போனில் பேசி வந்த நிலையில், சாந்தியை திருமணம் செய்து கொள்வதாக நைம் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த வாரம் சேலம் வந்த சாந்தி, ஏற்காடு, குரும்பப்பட்டி உள்ளிட்ட பல பகுதி களுக்கு நைம் மாலிக்குடன் சென்று வந்துள்ளார். அன்று மாலை, சாந்திக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்த நைம் மாலிக், அவரை அரிசிப்பாளையத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார். அங்கு நைம் மாலிக் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என 3 பேரும் சேர்ந்து சாந்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டிய அவர்கள், சாந்தியின் ஏடிஎம் கார்டில் இருந்து 17 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து சாந்தி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் மகளிர் போலீசார், நைம் மாலிக் (24), அவரது நண்பர்களான 4 ரோடு காமராஜ் காலனியைச் சேர்ந்த நபீஸ் (29), பெரமனூரைச் சேர்ந்த ரஞ்சித் (25) ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட வாலிபர்கள், இதேபோல் வேறு பெண்களிடம் நடந்துள்ளனரா? என விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் இருந்து பல ஸ்மாட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், பலாத்காரம், பெண்களிடம் உல்லாசம் அனுபவிப்பது என ஏராளமான ஆபாச வீடியோக்கள் உள்ளன. எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து பல பெண்களை பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்துள்ளனரா? என விசாரித்து வருகிறோம். லாட்ஜ் ஊழியர்கள் மற்றும் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arrests ,men , Cellphone, video, arrest, teenager, rape
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...