40 வருடமாக திருட்டு தொழிலில் கலக்கிய சென்னை ஆசாமி கைது

திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா உள்பட 3 மாநிலங்களில் 40 வருடங்களாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு, 400க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த ஆசாமியை கொச்சி போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கொச்சியின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து கொள்ளையனை பிடிக்க பாலாரிவட்டம் இன்ஸ்பெக்டர் சிஜேஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொள்ளையனை பிடிக்க வலைவிரித்தனர். இதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களாக கொச்சி நகர் முழுவதும் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு பாலாரிவட்டம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் நடத்தியபோது, அவ்வழியாக பைக்கில் ஒருவர் வந்தார். அவர் போலீசை கண்டதும் நிற்காமல் வேகமாக ெசன்றார். சந்தேகமடைந்த போலீசார் துரத்தி சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த லாரன்ஸ் டேவிட்(62) என்பதும், இவர்தான் கொச்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர் குறித்து போலீஸ் மேலும் விசாரிக்கையில் பகீர் தகவல் வெளியவந்தது.

இவர் பாலாரிவட்டம் தெற்கு ஜனதா ரோட்டில் ஒரு நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் கொள்ளையடித்தது என கொச்சியில் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். கடந்த 40 வருடங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் உள்பட பகுதியில் வீடு மற்றும் கடைகளை உடைத்தும் கொள்ளையடித்து வந்துள்ளார். மேற்படி 3 மாநிலங்களிலும் சேர்ந்து இவர் மீது 400க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பலமுறை கைது செய்யப்பட்டுள்ள இவர் 20 வருடம் சிறை வாசம் அனுபவித்துள்ளார். 5 முறை தமிழ்நாட்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பரில் புதுச்சேரி சிறையில் இருந்து விடுதலையான இவர், பின்னர் எர்ணாகுளத்தில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தலைமறைவாக இருந்து வந்தார். இங்கிருந்து தான் கொச்சியிலும், திருச்சூரிலும் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமாகாத இவர் திருட்டு பணத்தில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்து ஆடம்ப வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்பதும் விசராணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின் கொச்சி போலீசார் லாரன்ஸ் டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தார். போலீசார் இவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளார். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என போலீசார் கருதுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Assam , Arrested, theft, Chennai
× RELATED இந்தியாவில் 40 சதவீத டயர்கள்...