×

தண்ணீர் வரத்தின்றி குட்டையாக மாறிய வாணியாறு அணை

பாப்பிரெட்டிப்பட்டி  : பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காடு பகுதியில் வாணியாறு அணைக்கு தண்ணீர் வரத்தின்றி குட்டை போல்   காட்சியளிப்பதால் விவசாயிகள் வேதனை  அடைந்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காடு பகுதியில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 65 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணை கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணையின் மூலம், 10,517 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையில் இருந்து வெங்கடசமுத்திரம், மோளையானூர், மெணசி, பூதநத்தம், மருக்காலம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை காலங்களில், அணை நிரம்பி வழியும்.

அப்போது, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், பருமழை பொய்த்தால், அணைக்கு நீர்வரத்தின்றி குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால், அணையை நம்பியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaniyar Dam , papirapatty,Vaniyaru dam ,water
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பூசாரி...