×

அரசு திட்டங்களுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு 6 மாதங்களுக்குள் இழப்பீடு வழங்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு

சென்னை:  கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள தேவனேரி கிராமத்தில் சேகர், பிரபாகரன் ஆகியோரின் 226 சதுர மீட்டர் நிலத்தை அரசு கடந்த 2014ல் கையகப்படுத்தியது. ஆனால் நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.   இதையடுத்து சேகர் மற்றும் பிரபாகரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடைேய, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு செங்கல்பட்டு ஆர்டிஓவுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் 2016ல் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை ஆர்டிஓ அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சேகர், பிரபாகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டதும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது..உத்தரவில் நீதிபதி மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு திட்டங்களுக்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு 6 மாதங்களுக்குள் இழப்பீடு தொகையை வழங்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய்துறை செயலாளர் உடனடியாக உத்தரவிட வேண்டும். இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Collector ,Government of Tamil Nadu , Government Plans, TN Government
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...