×

பாஜ சொல்வதை செய்யும் கட்டாயத்தில் தேர்தல் ஆணையம்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்பி அளித்த பேட்டி: திமுகவுக்கு யாரிடமும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. எங்களுடைய கூட்டணி வெளிப்படையானது. நாங்கள் யாரை எதிர்க்கிறோமோ அவருடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.பாஜ, தேர்தல் ஆணையத்துடன் ரகசியமாக இல்லை. வெளிப்படையாகவே கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் பிற துறையினரும் பாஜ சொல்கிறபடி இயங்க வேண்டிய சூழ்நிலையிலும் கட்டாயத்திலும் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். சபாநாயகர் தன் மீதே நம்பிக்கை இல்லாத நிலை இருக்கும்போது சபாநாயகர் எப்படி அடுத்தவர் மீது நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission , BJP, Election Commission, Kanimozhi MB
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...