×

வேளச்சேரியில் நீச்சல் பயிற்சி முகாம்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  வேளச்சேரி நீச்சல் குளத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்கள் நடைபெற உளளன. இது குறித்து வேளச்சேரி  நீச்சல் வளாக அலுவலர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையை முன்னிட்டு  வேளச்சேரி நீச்சல்  வளாகத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம்கள் நடத்துகிறோம். மே, ஜூன் மாதங்களில் தலா 12 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம்கள் நடைபெறும்.  முதல் பயிற்சி முகாம்  மே 8ம் தேதியும், 2வது முகாம் மே 22ம் தேதியும், 3வது முகாம் ஜூன் 5ம் தேதியும், 4வது முகாம் ஜூன் 19ம் தேதியும் தொடங்கும். வயது வரம்பு இல்லை.  தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  காலை 10.00 - 11.00 மணி). மொத்தம் 12 நாட்கள் கொண்ட முழுமையான பயிற்சிக்கு ₹2 ஆயிரம் கட்டணம். இதை வரைவோலையாக செலுத்த வேண்டும். மேலும் தகவலறிய 044-2235 4381.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Swimming Training Camp ,Velachery , Swimming Training Camp , Velachery
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...