சென்னை: இந்திய வாலிபால் அணிக்கு செர்பியாவை சேர்ந்த டிராகன் மிகைலோவிச் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து இந்திய வாலிபால் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய வாலிபால் அணிக்கு செர்பியாவை சேர்ந்த டிராகன் மிகைலோவிச் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். செர்பியாவின் தேசிய வாலிபால் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி உலக சாம்பியன், ஐரோப்பிய சாம்பியன், ஒலிம்பிக் சாம்பியன் உட்பட பல்வேறு பட்டங்களை வென்றுள்ளது. இவருடன் போலந்தை சேர்ந்த பிரியமைஸ்லா காஸ்யோஸ்கி உடற்பயிற்சியாளராகவும், செர்பியாவை சேர்ந்த விளாதிமிர் ரடோசேவிச் உடற்பயிற்சி மருத்துவ நிபுணராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஒலிம்பிக், ஆசிய போட்டிகளில் இந்திய வாலிபால் அணி பதக்கம் வெல்வதை இலக்காக கொண்டு இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி