×

இங்கிலாந்துக்கு 199 ரன் இலக்கு

டப்ளின்: அயர்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 199 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தி வில்லேஜ், மலாஹைட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. அந்த அணியில் டேவிட் மாலன், பென் போக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகமாகினர். அயர்லாந்து அணியிலும் புதுமுக வீரர்கள் லோர்கன் டக்கர், மார்க் அடேர், ஜோஷ் லிட்டில் ஆகியோர் இடம் பெற்றனர். மழை காரணமாக தலா 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். அயர்லாந்து அணி 43.1 ஓவரில் 198 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஸ்டர்லின் 33, அடேர் 32, பால்பிர்னி 29, டாக்ரெல் 24, கேப்டன் போர்ட்டர்பீல்டு 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிளங்கெட் 4, டாம் கரன் 3, ஆர்ச்சர், ரஷித், டென்லி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 45 ஓவரில் 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : England , England score 199
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து