×

ஆப்கானிஸ்தானில் உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்: லோயா ஜிர்கா மாநாட்டில் வலியுறுத்தல்

காபூல்: காபூலில் நேற்றுடன் முடிந்த `லோயா ஜிர்கா’ அமைதி மாநாட்டில், உடனடியாக நிரந்தர போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடும்படி அதிபர் அஷ்ரப் கனி, தலிபான்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. கடந்தாண்டு ரலமான் மாதத்தில் ஆப்கன் அரசும் தலிபான்களும் அறிவித்த போர் நிறுத்தத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மற்றொரு புறம் அமெரிக்கா தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைதி தூதர் ஜல்மே கலில்ஜாத் உடனும் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காபூலில் நடந்த `லோயா ஜிர்கா’ அமைதி மாநாடு நேற்றுடன் முடிந்தது. கூட்ட முடிவில், ஆப்கன் அரசு, தலிபான்கள் உடனடி நிரந்த போர்  அறிவிப்பை வெளியிட வேண்டுமென்றும், அது வரும் புனித ரமலான் மாதத்தில்  தொடங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.  

இதில் பங்கேற்ற பெண்கள், ‘தலிபான்கள் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால், இஸ்லாமிய தீவிரவாதிகள் இதனை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள். பெண்கள் உரிமை, பத்திரிகை சுதந்திரம், சட்ட பாதுகாப்பு ஆகியவற்றில் தலையிடுவார்கள். மேலும் பெண்களின் உரிமைக்கு மரியாதை அளிக்காமல், கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தேர்தலும் நடத்தப்படாமல் ஏற்படும் அமைதி பேச்சுவார்த்தை தேவையில்லை’ என்று தெரிவித்தனர். போர் நிறுத்தம் குறித்து பதிலளித்த அதிபர் கனி, `நியாயமான, சட்டப்படியான போர் நிறுத்தத்தை செயல்படுத்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால், அது ஒருதரப்பு நடவடிக்கையாக இருந்து விடக் கூடாது. தலிபான்கள் முழு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டால், பின்னர் மற்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்’ என வலியுறுத்தினார்.

அதிபர் கனியை அமெரிக்காவின் கைக்கூலியாக கருதுவதால், தலிபான்களிடம் இருந்து இதுவரை இதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், லோயா ஜிர்கா மாநாடு, வரும் செப்டம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முந்தைய முன்னோட்டமாக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ceasefire ,Afghanistan ,Loya Jirga Conference , Afghanistan, ceasefire, Loya Jirga Conference
× RELATED கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல்...