×

படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா வைத்திருந்த கதாநாயகன், கேமராமேன் கைது: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் கஞ்சாவுடன் இருந்த கதாநாயகனும், கேமரா  மேனும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம்  மலையாள திரையுலகில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள  மாநிலம், கொச்சியில் கஞ்சா,  பிரவுன்சுகர், கொகைன் உள்ளிட்ட போதை பொருட்கள்  கடத்தும் கும்பல் நடமாட்டம்  அதிகளவில் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும்  கொச்சிக்கு போதை பொருள்  கடத்தப்பட்டு வருகிறது. போலீசார், கலால் துறையினர் மற்றும் போதை  பொருள் தடுப்பு துறையினர் அடிக்கடி  சோதனை நடத்தி போதை பொருட்களை கைப்பற்றி  வருகின்றனர். ஆனாலும், கடத்தல்  கும்பல் கைவரிசை தொடரத்தான்  செய்கிறது. இந்நிலையில், மலையாள சினிமா படப்பிடிப்பு  தளங்களிலும் போதை  பொருள் கடத்தப்படுவதாக கொச்சி கலால்துறைக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து  ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் அதிகாரிகள்  கொச்சியில் சினிமா படப்பிடிப்பு  நடைபெறும் ஸ்டுடியோக்களை ரகசியமாக  கண்காணித்தனர்.

அப்போது, கொச்சியில் ஒரு ஸ்டுடியோவில் ‘என்றெ  ஜமீலான்டெ பூவன்கோழி’ என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.  அங்கு கலால் துறையினர்  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது படத்தின்  கதாநாயகனும், அறிமுக நாயகனுமான கோழிக்கோட்டை சேர்ந்த மிதுன் (25) மற்றும் கேமராமேனான பெங்களூரூவை சேர்ந்த விஷால் வர்மா ஆகியோரிடம் கஞ்சா இருந்தது  தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கலால்துறையினர் கைது செய்தனர்.  இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களைப்பை போக்க கஞ்சா
கஞ்சாவுடன் சிக்கிய கதாநாயகன் மிதுன், கேமராமேன் விஷால் வர்மாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இருவரும் கடந்த 2 மாதங்களாக கொச்சியில் உள்ள  விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா பயன்படுத்தி வந்துள்ளனர். கொச்சியை சேர்ந்த கும்பல் தினமும்  இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு களைப்பை  போக்க கஞ்சாவை பயன்படுத்தியதாக இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cannabe ,cameraman ,Kerala , Kanja, hero, cameraman, arrest, and kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...