×

அக்டோபர் - ஏப்ரல் மாதங்களில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா சாதனை

புதுடெல்லி: கடந்த 2017-18ம் சந்தை ஆண்டில் (அக்டோபர் - செப்டம்பர்) மொத்தம் 32.5 மில்லியன் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. உலகில் சர்க்கரை உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது இந்தியா. இதன் உள்நாட்டு தேவை 26 மில்லியன் டன்கள்தான். கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரையில் மொத்தம் 32.11 மில்லியன் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது..
நாட்டில் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள மூன்று மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவை முறையே 11.26 மில்லியன் டன்கள், 10.7 மில்லியன் டன்கள், 4.32 மில்லியின் டன்கள் என்ற அளவில் உற்பத்தி செய்துள்ளன. சந்தை ஆண்டு என்பது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கரும்பு அறவை என்பது குறைவாகத்தான் நடந்துள்ளது. ஆனால், 2018-19ல் சர்க்கரை உற்பத்தி என்பது அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India , India's record, sugar production , October-April
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!