×

அது, 7 இல்லப்பா 14 ...ஆம் ஆத்மியிடம் பாஜ அலம்பல்

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜ.வுக்கும் ஆம் ஆத்மிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒவ்வொரு விஷயத்திலும் மோதல்தான். இந்நிலையில், ‘தங்கள் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஆம் ஆத்மியை சேர்ந்த 7 எம்எல்ஏ.க்களிடம் பாஜ குதிரை பேரம் நடத்தி வருகிறது. தலைக்கு 10 கோடி தருவதாக பேரம் பேசுகிறது’ என ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மாநில துணை முதல்வருமான சிசோடியா கடந்த புதன்கிழமை குற்றம்சாட்டினார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 14 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். கட்சியின் நடவடிக்கைகளில் அவர்கள் வெறுத்து போயுள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் எங்களுடன் சேர தயாராக உள்ளனர். எம்எல்ஏ.க்கள் விலைக்கு கிடைப்பார்கள் என்பதை தனது குற்றச்சாட்டில் சிசோடியா உறுதி செய்துள்ளார். தலா 10 கோடி லஞ்சம் என விலையையும் அவரே நிர்ணயித்து உள்ளார். அவரது குற்றச்சாட்டு பொய்யானது. பாஜ மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் காட்டத் தயாரா?’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan , AAP, BJP
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...