×

தமிழிசை பேட்டி தமிழகத்தில் சாமி சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

தூத்துக்குடி:  தமிழக பாஜ தலைவர் தமிழிசை, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி பிரசாரத்தின்போது என்னை சந்தித்த ஒரு இளைஞர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனது சிகிச்சைக்கு உதவுமாறும் கூறினார். உடனே அவரை மூகாம்பிகை மருத்துவமனையில் சேர்த்தேன். 4 நாட்கள் டெல்லியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். அதன்பிறகு தமிழகத்தில் 4 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.தமிழகத்தில் சாமி சிலைகள் நிச்சயமாக பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sami , Temple statues,protected in Tamil
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...