×

ஆம்பூர், ஜெயங்கொண்டத்தில் சோதனை 1.25 கோடி குட்காவுடன் லாரி, கார் பறிமுதல்

ஆம்பூர்: ஆம்பூர், ஜெயங்கொண்டத்தில் நேற்று 1.25 கோடி மதிப்பிலான குட்காவுடன் வந்த லாரி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேலூர் நோக்கி வருவதாக எஸ்பி பிரவேஷ்குமாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் மற்றும் போலீசார், சாணாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 1.30 மணியளவில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில், சேலத்தை சேர்ந்தவர்களான டிரைவர் சுரேஷ்குமார்(32), கிளீனர் சரவணன் (26) என்பதும்,  சேலத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும் தெரியவந்தது. லாரியை சோதனையிட்டதில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அட்டைப்பெட்டிகளில் இருந்தது. போதை பொருட்களை பெங்களூரில் இருந்து வேலூருக்கு ஏற்றி வந்ததாகவும் இதை ஏற்றியவர்கள் பின்னால் காரில் வருவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவ்வழியாக வந்த ஒரு மடக்கினர். காரில் இருந்த 3 பேரை போலீசார் விசாரித்தனர். அதில், வேலூரை சேர்ந்த  இப்ராஹிம்(37), அப்துல் பைஸ்(29), முஹம்மத் கவுஸ்(27) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் குட்கா உள்ளிட்ட போதை பொருள்,  லாரி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். 75 லட்சம் குட்கா: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விருத்தாச்சலம் சாலையில் 75 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambur ,Jayankondi , lorry was seized,car, 1.25 crore gutka , Ambur, Jayankondi
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...