ஐபிஎல் டி20: பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்க்கத்தா அணி வெற்றி

மொஹாலி: பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்க்கத்தா அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 55 ரன்கள், பூரன் 48 ரன்களும் எடுத்தனர். மேலும் கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுமன் கில் 65 ரன்கள், கிறிஸ் லின் 46 ரன்களும் எடுத்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kolkata Knight Riders ,Kings XI Punjab , Kolkata Knight Riders, Kings XI Punjab,
× RELATED ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல...