×

இரவு நேரத்தில் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்: பயணிகள் சிரமம்

திருமங்கலம்: இரவு நேரத்தில் திருமங்கலம் பஸ்ஸ்டாண்டை அரசு பஸ்கள் புறக்கணித்து செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை  பரபரப்பாக இயங்கி வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் திருமங்கலம் வழியாக செல்லும் வெளியூர் பஸ்களில் பெருபாலானவே பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் நான்குவழிச்சாலை வழியாகவே செல்கின்றன. இரவு நேர டவுன் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டின் வெளியே மதுரை ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் மற்றும் டூவீலர் ஸ்டாண்டிற்குள் மட்டும் ஒருசிலர் வந்து தங்களது வாகனத்தை எடுத்து செல்கின்றனர். இரவு நேர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் குறிப்பாக பெண்கள் கழிவறை செல்லக்கூட அச்சப்படும் நிலை உள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை இரவில் அனைத்து டவுன் பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் இருந்துதான் இயக்கப்பட்டன.
ஆனால் திருப்பூர், கோவை என ஆரப்பாளையம் செல்லும் தென்மாவட்ட வெளியூர் பஸ்கள் ரிங்ரோடு வழியாக மாட்டுத்தாவணி செல்லாமல் கப்பலூர், தோப்பூர் வழியாக ஆரப்பாளையம் செல்வதால் டவுன் பஸ்களில் கலெக்சன் குறைவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி செல்லும் டவுன்பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே இருந்து இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் திருமங்கலம் பஸ்ஸ்டாண்ட் வெறிசோடி காணப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus stand ,Tirumangalam , Tirumangalam, bus, government buses
× RELATED செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்...