×

ஒசாமா படத்துடன் ஓடிய கார் பறிமுதல் உரிமையாளரிடம் போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கேரளாவில் பாலக்காடு, காசர்கோடு உள்பட பகுதிகளில் ஐஎஸ் இயக்கத்தினருடன் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதுதொடர்பாக பாலக்காட்டை சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் கொச்சி, கொடுங்கல்லூர் ஆகிய இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இவரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், நேற்று என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று கொல்லத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தபோது, அல்கொய்தா தீவிரவாதத்தின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் படத்துடன் ஒரு கார் செல்வதை போலீசார் கவனித்தனர். இதையடுத்து போலீசார் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த கார் மேற்கு வங்க மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது என தெரியவந்தது. தொடர்ந்து காரின் உரிமையாளரை பிடித்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே அவர் யார்? எதற்காக ஒசாமா படத்தை காரில் ஒட்டியிருந்தார் என்பது தெரியவரும். இவருக்கு ஐஎஸ் உள்பட தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Osama ,owner , Sri Lanka, Kerala, NIA, Osama
× RELATED நெல்லை மதுரம் ஓட்டலில் வழக்கறிஞர்...