×

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா காமோவ் ரக ஹெலிகாப்டர்களை வாங்க திட்டம்

டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா காமோவ் ரக ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டுள்ளது. காமோவ் ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஏற்கெனவே 12 உள்ளன. கடற்பரப்பில், விமானம் தாங்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பளிக்கின்றன. ஆனால் தற்போது போர் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 10 காமோவ் ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறையை கடற்படை வலியுறுத்தியுள்ளது. 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 10 காமோவ் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான வேலைகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய ராணுவத்திடம் சேட்டக், சீட்டா ராக ஹெலிகாப்டர்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு மாற்றாக விமானப்படை, தரைப்படையில் ரஷ்யாவின் 200 காமோவ் கேஏ-226டி ரக ஹெலிகாப்டர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இரட்டை இன்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் மலைப் பகுதிகளில் சிறப்பாக இயங்கும் திறன் வாய்ந்தது. இந்த ரக ஹெலிகாப்டர்களை, ‘ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ்’ (ஆர்எச்) நிறுவனம் தயாரிக்கிறது.

ரஷ்யாவுக்கு கடந்த 2015ம் ஆண்டு சென்ற பிரதமர் மோடி, 60 காமோவ் ஹெலிகாப்டர்கள் அந்த நாட்டிடம் இருந்து வாங்கவும், 140 ஹெலிகாப்டர்களை எச்.ஏ.எல் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூரு அருகேயுள்ள தும்கூரில் உள்ள ஆலையில் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் தயாரித்து கொடுக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russia , India, Kamov, Russia, Helicopter
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...