×

தமிழகம் முழுவதுமுள்ள ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஏப்-1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் பதிவு நிறுத்தம்!

சென்னை: ஏப்ரல் 1ம் தேதி முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வது, தமிழகம் முழுவதுமுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும்(ஆர்.டி.ஓ) நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்தவதை நடைமுறைப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளில் பார்கோடு இடம்பெற்றிருக்கும். பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேசிஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். இந்த வகை நம்பர் பிளேட்டுகளை நடைமுறைப்படுத்தும்போது வாகனங்களை திருடி ஒரே எண்ணை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும், திருட்டு வாகனங்களை மீட்பது, விபத்து ஏற்படுத்துவிட்டு தப்பிச் செல்பவர்களை பிடிப்பது உள்ளிட்டவற்றுக்கும் இத்தகைய நம்பர் பிளேட்டுகள் உதவும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏற்கனவே சுற்றுறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் அதற்கான வழிகாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்படாத நிலையில் ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பதிவை தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RDO ,office ,Tamilnadu , Tamilnadu, RTO office, vehicle, registration, digital number plate
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்