×

உலகிலேயே முதல்முறையாக சந்திரனின் தென்துருவத்தில் தரையிரங்கவுள்ள சந்திராயன்-2 விண்கலம்: இஸ்ரோ தலைவர் தகவல்

நாகர்கோவில்: உலகிலேயே முதல்முறையாக சந்திரனின் தென்துருவத்தில் சந்திராயன்-2 விண்கலம் தரையிரங்கவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல் விளை கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திராயன்-2 விண்கலம் ஜூலை வருகிற ஜூலை 9ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும். அது செப்டம்பர் 6ம் தேதி நிலவில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் கூறுகையில், இது தரை இறங்கியவுடன் நிலவின் நிலப்பரப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும். உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தில் சந்திராயன்-2 விண்கலம் தரையிறங்கவுள்ளது. இதன் மூலம் புதிய தகவல்களை கண்டு பிடிக்க முடியும். அந்த கண்டுபிடிப்புகளை தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவின் இஸ்ரோ மையம் சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சூரியனை பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும். விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இதனை செயல்படுத்த திட்ட வடிவமைப்பு நிறைவு பெற்றுள்ளது. வருகிற 2022ம் ஆண்டிற்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும் என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 108 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த சிறப்பு பயிற்சியை இஸ்ரோ வழங்க உள்ளது என்றும் இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் எனவும் சிவன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, ஃபானி புயல் குறிப்பிட்ட பகுதியில் கரையை கடந்துள்ளது. துல்லியமாக கணிக்க முயன்றதால் உயிர் சேதம் உட்பட பெரிய பாதிப்புகள் இல்லாமல் பாதுகாக்க முடிந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : world ,moon ,time ,ISRO , Chandraayan 2, ISRO, Sivan, Aditya L1
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...