×

ருத்ரதாண்டவம் ஆடிய போனி புயல் ஒடிசாவில் கரையை கடந்தது; மேற்கு வங்கம் நோக்கி நகர்கிறது; மம்தா பிரசார பயணம் ரத்து

புவனேஷ்வர்: அதி தீவிர புயலான போனி புயல் ஒடிசா மாநிலம் புரி பகுதியில் கரையை கடந்தது. அடுத்த 6 மணி நேரத்திற்கு ஒடிசாவில் மோசமான வானிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சூறைக்காற்று வீசி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை என்றும், போனி புயலால் ஒடிசா மாநிலம் புரியில் 142 கி.மீ.- 174 கி.மீ. வரை காற்று வீசி வருகிறது. ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே போனி புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது.

போனி புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஒடிசாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஒடிசாவில் தற்போது மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. மேலும் புயலின் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயலின் தாக்கம் 11 மணி வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான அதிதீவிர பானி புயல், ஒடிசாவில் கரையை கடக்க தொடங்கியது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மீட்பு பணிக்காக கடற்படை, விமான படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான பானி புயல், அதிதீவிர புயலாக மாறியது. இது ஒடிசா மாநிலத்தை நோக்கி நகர்ந்து வந்தது. பூரிக்கு தென்மேற்கே 430 கிமீ., ஆந்திராவில் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 225 கிமீ. தூரத்தில் புயல் நிலை கொண்டிருந்தது.

இது, இன்று பகலில் பூரி அருகே கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 200 கிமீ.க்கு பலத்த காற்று வீசும். மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் உள்ள 11 முதல் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. எனவே, இப்பகுதிகளில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 11 லட்சம் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puni ,storm rudrandamam storm ,Odisha ,West Bengal ,Mamata , Fani Storm, Odisha, West Bengal, Meteorological Center, Storm
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...