×

பானி புயல் எதிரொலி ஒடிசா வழியாகசெல்லும் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பானி புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள பானி புயல் இன்று ஒடிசாவில் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மேலும் 10 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹவுரா - யஸ்வந்த்பூர் விரைவு ரயில் (12863), சென்ட்ரல் - ஹவுரா (12839) மெயில்,  பாட்னா - எர்ணாகுளம் வாரந்திர விரைவு ரயில் (22644), யஸ்வந்த்பூர் - ஹவுரா துரந்தோ விரைவு ரயில் ( 12246 ), பெங்களூர் கன்டோன்மென்ட் - அகர்தலா விரைவு ரயில்கள் (12503) உள்ளிட்ட ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

சந்திரகாச்சி - சென்ட்ரல் விரைவு ரயில் (02842), விழுப்புரம் - புருலியா விரைவு ரயில் (22606) நாளை ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவு ரயில் (18495) , கொச்சிவேலி - கவுகாத்தி சுவிதா சிறப்பு ரயில் (82636) 5ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் - சில்சார் அரோனை விரைவு ரயில் (22851 ) 7ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Bani ,cancellation ,announcement ,Southern Railway , Bani storm, echo, Odisha route, trains canceled
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...