×

4 தொகுதியில் 14,698 போலீசார் பாதுகாப்பு

சென்னை: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் துணை ராணுவ வீரர்கள், தமிழக போலீசார் என மொத்தம் 14,698 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் 13 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் உள்பட தமிழக போலீசார் என மொத்தம் 14,698 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதியில் 320 துணை ராணுவம், 640 தமிழ்நாடு சிறப்பு போலீஸ், 2,577 உள்ளூர் போலீசார், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 4,037 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 240 துணை ராணுவம், 560 தமிழ்நாடு சிறப்பு போலீஸ், 2,165 உள்ளூர் போலீசார், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 3,465 பேரும், சூலூர் தொகுதியில் 240 துணை ராணுவம், 560 தமிழ்நாடு சிறப்பு போலீஸ், 2,823 உள்ளூர் போலீஸ், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 4,123 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 240 துணை ராணுவம், 560 தமிழ்நாடு சிறப்பு போலீஸ், 1,773 உள்ளூர் போலீஸ், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 3,073 பேர் தேர்தல் நாள் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policemen ,constituencies , 4 block, 14,698 police, security
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்