×

அலுவலகம் அமைந்துள்ள எல்லைக்குள் சார்பதிவாளர்களுக்கு சொத்து இருக்கக் கூடாது: வீடு, மனைகளாக வாங்கி குவித்தவர்களின் பட்டியலை கேட்கிறது ஐஜி அலுவலகம்

சென்னை: சார்பதிவு அலுவலக எல்லைப் பகுதிகளில் சார்பதிவாளர்களுக்கு வீடு, மனை என்று எந்த சொத்தும் இருக்கக்கூடாது. அதையும் மீறி சொத்து இருந்தால் அவர்கள் தொடர்பான விவரங்களை அனுப்ப வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி அலுவலகம் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக பத்திரப்பதிவுத்துறையில் சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஏஐஜி, டிஐஜி உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், சார்பதிவாளர்கள், ஏஐஜி, டிஐஜிக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். மேலும், 575 சார்பதிவு அலுவலகங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலக எல்லை பகுதியில் அவர்களுக்கு எந்தவிதமான வீடு, மனை உள்ளிட்ட எந்த சொத்தும் வைத்திருக்கக் இருக்க கூடாது என்ற விதி உள்ளது.

காரணம், அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் அவர்கள் முறைகேடாக சொத்துக்களை வாங்கி குவிக்க வாய்ப்பு இருப்பதால் தான் இப்படி ஒரு உத்தரவை அரசு பிறப்பித்துள்து. எனவே தான், சார்பதிவாளர்கள் சொத்துக்கள் இல்லாத பகுதிகளில் தான் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் விதிகளை மீறி சார்பதிவாளர் அலுவலக எல்லை அமைந்துள்ள பகுதிகளில் சார்பதிவாளர்கள் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அவர்களுக்கு சொத்துக்கள் உள்ள பகுதிகளில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜிக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பதிவுத்துறை தலைமை அலுவலகம் சார்பில் சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைந்துள்ள எல்லை பகுதிகளில் சொத்துக்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும் டிஐஜி அலுவலகங்களுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘சார்பதிவாளர்கள் மட்டுமின்றி உதவியாளர்களும் தங்களது அலுவலக எல்லை பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் ரகசிய அறிக்கை தயாரிக்க பதிவுத்துறை தலைமை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் 150க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள், ஊழியர்கள் அலுவலக எல்லை அமைந்துள்ள பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக விரைவில் உரிய விசாரணை நடத்தப்படுகிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,office ,home buyers ,buyers ,IG , Office, border, resident, property, listing, IG office
× RELATED வாட்டி வதைக்கும்...