×

மக்கள் எதை கேட்டாலும் காங். அரசு நிறைவேற்றும்: ராகுல் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலம், சிம்டேகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கலந்து கொண்டு பேசியதாவது: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக பணி செய்யாமல் 15-20 பேருக்காக மட்டும் தான் பணியாற்றி இருக்கிறார். அவர் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறி ஏமாற்றி விட்டார். மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறினார். அதனையும் அவர் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நியாய் திட்டத்தின் கீழ் 5 கோடி ஏழை மக்களின் வங்கி கணக்கில் ஒரு ஆண்டுக்குள் ரூ.72 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். நான் எங்களின் மன் கீ பாத்தை பற்றி பேசுவதற்காக வரவில்லை. உங்களின் மன் கீ பாத் குறித்து கேட்பதற்காக வந்துள்ளேன்.

நீங்கள் எதை கேட்டாலும் நாங்கள் அதை செய்து தருவோம். மக்களாகிய நீங்கள்தான் மாஸ்டர். பிரதமர் மோடியோ அல்லது எந்த அரசியல் தலைவரும் உங்களுக்கு மாஸ்டர் கிடையாது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள். நாங்கள் அதை நிறைவேற்றி தருகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகள் அறிமுகம் செய்யப்படும். பல்கலைக் கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,announcement ,Rahul , People, kong. Rahul, the state executive
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு