×

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு அதிமுக சார்பில் கூடுதல் பொறுப்பாளர்

சென்னை: ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு அதிமுக சார்பில் கூடுதல் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களோடு கூடுதல் பொறுப்பாளராக பி.ஏ.ஆறுமுகநயினார் (தூத்துக்குடி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர்) தேர்தல் பணியாற்றுவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Ottapidaram , Ottapidaram block, AIADMK, supplementary, trustee
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...