×

எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கு டான்செட் நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலை. நடத்தும்: துணைவேந்தர் சூரப்பா பேட்டி

சென்னை: முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான டான்செட் நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்று துணைவேந்தர் சூரப்பா கூறினார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை இன்ஜினியரிங், தொழில் சார் படிப்புகளுக்கு எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்துவதில் அண்ணா பல்கலைக்கழகம், உயர் கல்வித்துறை இடையேயான கருத்து வேறுபாட்டால், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும் 20 கல்லூரிகளுக்கு AUCET என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம், உயர்கல்வித்துறை இடையேயான பிரச்னை தொடர்ந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு டான்செட் நுழைவுத்தேர்வை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, உயர் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
காலையில் தொடங்கி பிற்பகல் வரை நீடித்த ஆலோசனை கூட்டத்தில் டான்செட் நுழைவுத்தேர்வை நடத்துவது, வினாத்தாள் வடிவமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தேர்வு தேதி, தேர்வு மையங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், 20 பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்த (AUCET) தேர்வு கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏற்கனவே அறிவித்தபடி அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு தனியாக நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்படாது. டான்செட் நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும். அண்ணா பல்கலைக்கழகமே அதற்கு முழு பொறுப்பேற்கும். இவ்வாறு துணைவேந்தர் சூரப்பா கூறினார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Danny Entrance Examination for MBA ,Anna University ,MCA , MBA, MCA, Study, Dancet, Entrance Exam, Anna University, Vice Chancellor, Surappa, Interview
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...