×

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் நாளை பாமக ஆலோசனை கூட்டம்: ஜி.கே.மணி அறிக்கை

சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வௌியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்காக பாமகவினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

அடுத்தக்கட்ட பரப்புரை உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துத் தொகுதிகளிலும் பாமக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று சூலூரிலும், 4ம் தேதி (நாளை) அரவக்குறிச்சியிலும், 5ம் தேதி (நாளை மறுநாள்) திருப்பரங்குன்றத்திலும், 6ம் தேதி ஓட்டப்பிடாரம்  தொகுதியிலும் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பொறுப்பு வகிக்கும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : consultation meeting ,constituencies ,GKMani ,by-elections , The by-election, the PM's consultation meeting, GKMani
× RELATED கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு...