×

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்: சிறைக்கு நிர்வாகத்துக்கு எழும்பூர் நீதிபதி உத்தரவு

சென்னை: அந்திய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே 13ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறை நிர்வாகத்துக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 1996 - 97  ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ஜெஜெடிவிக்கு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கொடநாடு டீ எஸ்டேட் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பறிமாற்றம் செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் சசிகலா மீது ஜெஜெடிவிக்கு பொருட்கள் வாங்கியதில் மோசடி நடந்ததாக 3 வழக்கும், கொடநாடு டீ எஸ்ேடட் வாங்கியபோது பண பறிமாற்றம் செய்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கின் முதல் குற்றவாளியான பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சசிகலா மீதும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டு பதிவுக்கு பின்பு சசிகலா தரப்பினர் வழக்கு விசாரணைகளுக்கு சரியாக ஆஜராகவில்லை, குற்றச்சாட்டு பதிவில் சசிகலா கையெழுத்திடவில்லை என்று கூறப்பட்டது. இதனால் சசிகலா மீது மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வாரன்ட் பிறப்பித்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்தார்.

அப்போது சசிகலா தன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அமலாக்கத் துறை சாட்சிகளிடம்  தனது தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி  பிப்ரவரி மாதம் முதல் அரசு தரப்பு சாட்சிகளான 5 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணைக்காக சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மே 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சசிகலாவை ேநரில் ஆஜர்படுத்தகோரி சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Court ,judge ,Egmore , Foreign Exchange, Fraud, Sasikala, Court, Egmughar Judge
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...