×

எல்லா மோடியும் திருடர்கள் என கூறிய வழக்கு ஜூன் 7ல் ஆஜராக ராகுலுக்கு உத்தரவு

சூரத்: மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி கூறிய விமர்சனம் தொடர்பாக ஜூன் 7ம் தேதி ஆஜராக குஜராத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடக மாநிலம், கோலாரில் கடந்த 13ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோ, நரேந்திரமோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரில் இருக்கின்றனர் என்றார். ராகுல்காந்தியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராகுல்காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏவான புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இது குறித்து புர்னேஷ் மோடி கூறுகையில், ஏராளமானவர்கள் மோடி என்ற பெயருடன் இருக்கின்றனர்.

அப்படி என்றால் மோடி சமூகத்தை சேர்ந்த அனைவரும் திருடர்கள் என்று அர்த்தமா? அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறியதன் மூலம் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே ராகுல்காந்தி அவமானப்படுத்தி விட்டார், என்றார். இந்த வழக்கு தலைமை நீதிபதி பிஎச் கபாடியா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராகுல் காந்தி ஜூன் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். முன்னதாக பாஜ தலைவர் அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டதை எதிர்த்து பாஜ தொண்டர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல்காந்தி விளக்கம் அளிக்க கோரி புதன்று அகமதாத் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi , Modi, thief, case, directive to Rahul
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...