×

நாகையில் 8 நாட்களாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்

நாகை: வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைதொடர்ந்து பானி புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் நாகையில் மீனவர்கள் 8 நாட்களாக மீன் பிடிக்க செல்லவில்லை. பானி புயல், ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது. தற்போது, 8 நாட்களாக மீன் பிடி தொழிலுக்கு செல்லாததால் பொருளாதார ரீதியில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.  

இதேபோல், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் வானவன்மகாதேவி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் எட்டாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை தடை நீங்கினால்தான் மீன் பிடி தொழிலை முழுமையாக செய்திட முடியும் என்று மீனவர்கள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,sea , Nag, 8 day, sea, fishermen
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்