×

அடுத்த ஆண்டு முதல் எல்லை பாதுகாப்பில் ரோபோக்கள்

பெங்களூரு: எல்லை பாதுகாப்பு பணியில் அடுத்தாண்டு முதல் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் எல்லை உட்பட பல்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் வெயில், பனி போன்ற பல்வேறு இயற்கை இன்னல்களை தாங்கி கொண்டு தங்கள் பணியை செய்து வருகின்றனர். ஆனாலும், இரவில் நிலவும் இருட்டை பயன்படுத்தி ஊடுருவல்காரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதை தவிர்க்கும் வகையிலும், பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் வகையிலும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர்.  இந்நிலையில் பாதுகாப்புத்துறை, பெல் நிறுவனம், பெங்களூரில் உள்ள மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நவீன ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

எல்லையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபாக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் வகையில், இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. வரும் டிசம்பரில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ரோபோக்களின் மாதிரி வெளியிடப்படும் என பெல் நிறுவன உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தொடர்ந்து அடுத்த ஆண்டில் இந்த ரோபோக்கள் எல்லையில் பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் விலை ருஞ80 லட்சம் ஆக இருக்கும் எனவும் தொடர்ந்து படிப்படியாக விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Border protection, robots
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்