×

பிரிட்டன் குடிமகன் விவகாரம் ராகுலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜ மூத்த தலைவர் ஒருவர் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் அவர்,  ‘ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன். அங்குள்ள பேக்அப்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக 2003ல் ராகுல் இருந்துள்ளார். இந்த நிறுவனம் தாக்கல் செய்த 2005 - 2006ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில், ராகுலை பிரிட்டன் குடிமகன் என குறிப்பிட்டுள்ளது’ என கூறியிருந்தார். இது தொடர்பாக, ராகுலிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘அடுத்த 15 நாட்களில் தாங்கள் இந்திய குடிமகனா? அல்லது பிரிட்டன் குடிமகனா? என்பதை விளக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகுலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று 2 பேர் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், ‘ராகுல் அமேதி, வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் பிரிட்டன் குடிமகனாக பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை தீரும் வரையில் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்–்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்டது. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடக்கும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Britain ,Supreme Court ,Rahul , UK citizen, banned Rahul, Supreme Court, petition
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...