×

ஆந்திராவில் அவலம் பசிக்கு உணவின்றி மண்ணை தின்ற இரண்டரை வயது குழந்தை பலி

திருமலை: கர்நாடக மாநிலம், குடிபண்டா  கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது, மனைவி நீலவேணி. இவர்கள் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டம், கும்மராவன்ல பல்லி கிராமத்திற்கு வந்து சுமை தூக்கும்  தொழிலாளர்களுக்கான குடியிருப்பு அருகே  தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் தங்குவதற்கு வீடு, இல்லாததால் துணியால் கூடாரம் போன்று அமைத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி நீலவேணியின் அக்கா மகளின் இரண்டரை வயது  பெண் குழந்தையையும் இவர்களே  வளர்த்தனர். மகேசுக்கு கூலி வேலை கிடைப்பதும் அரிதாக இருப்பதால்  குடும்பம் கஷ்டப்படுகிறது. மேலும், வசிப்பதற்கு வீடு இல்லாததால் குழந்தைகளுடன் இரவு நேரத்தில் வீதியில் படுத்து உறங்குகின்றனர். பகலில் மரத்தின் கீழ் வசித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவர்களின் குழந்தைகளில் ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலவேணியின் அக்காவின் இரண்டரை வயது பெண் குழந்தை போதிய உணவு இல்லாமல் பசிக்கு  மண்ணைத் தின்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தது. இதையடுத்து குழந்தையின் சடலத்தை மகேஷின் குடும்பத்தினர் கூடாரம் அருகே புதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கதிரி கிராமிய போலீஸ் நிலைய எஸ்ஐ வெட்டசாமி, மகேஷின் குடும்பத்தினர் தங்குவதற்காக ஒரு அறையை தனது  சொந்தப் பணத்தில் கட்டித்தர முன் வந்துள்ளார். மேலும், குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி குழந்தைகள் நல அதிகாரி னிவாசன் நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று  சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra Pradesh , Andhra Pradesh, child,food ,without ,hunger
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி