×

திபெத் பகுதியில் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித தாடை கண்டுபிடிப்பு

துபாய்: மனித இனம் எனப்படும் ஹோமோ சேப்பியன்கள் ஆப்பிரிக்காவில், 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, நியாண்டர்தால் மற்றும் டெனிசோவான்ஸ் உள்ளிட்ட ஆறு விதமான மனித இனங்களுடன் இவ்வுலகில் வாழ்ந்ததாக  ஆராய்ச்சியளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து மனித இனம் தோற்றம் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறதுவட ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும், சஹாரா பகுதிகளிலும் பழங்கால மண்டை ஓடுகள் கிடைக்க பெற்று ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பண்டைய மனிதனின் வடிவத்தின் தாடை மேற்கு சீனாவில்  கண்டுபிடிக்கப்பட்டது. இது டெனிசோவான்ஸ் மனித இனத்தை சேர்ந்வர் என்றும் இவர்கள் 1,60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பண்டைய கால மனிதர்களின் முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படாது. காலப்போக்கில் சிரிப்பு, கோபம், அழுகை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த கூடியவர்களாக‌ மனிதர்கள் மாறியதால் முக அமைப்பு தோற்றத்தின் மாற்றத்திற்கு  முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது திபெத் பகுதியில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தாடை டெனிசோவான்ஸ் மனித இனம் தொடர்பான ஆராய்ச்சிக்கு வலு சேர்க்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tibetan , Tibet area, One-and-a-half, million years,human, jaw, discovery
× RELATED பல்வேறு துறைகளில் பணிபுரிய 138 பேருக்கு பணி நியமன ஆணை