×

லிவர்பூல் அணியை பந்தாடியது பார்சிலோனா: மெஸ்ஸி 600வது கோல்

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் முதல் கட்ட அரை இறுதியில், பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது.கேம்ப் நியூ ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் 26வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் சுவாரெஸ் அபாரமாக கோல் அடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. லிவர்பூல் வீரர்கள் பெரும்பாலான நேரம் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், பார்சிலோனா அணியின் தற்காப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியவில்லை.இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களுமே கோல் அடிக்கும் முனைப்புடன் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தில் இறங்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. 75வது நிமிடத்தில் சுவாரெஸ் அடித்த பந்து லிவர்பூல் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்ப  வர அதை மெஸ்ஸி பதற்றமின்றி வலைக்குள் திணித்தார்.

இதைத் தொடர்ந்து 82வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு ஒரு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. லிவர்பூல் வீரர்கள் வரிசைகட்டி மறைத்தபடி நிற்க, பந்தை அவர்களின் தலைக்கு மேலாகப் பறக்கவிட்டார் மெஸ்ஸி.லிவர்பூல் கோல் கீப்பரையும் ஏமாற்றிய பந்து கோல் கம்பத்தின் மேற்புற வலது மூலையில் தஞ்சமடைந்தது. சுமார் 75 அடி தூரத்தில் இருந்து மெஸ்ஸி அடித்த இந்த நம்ப முடியாத கோலால் லிவர்பூல் அணியினர் ஸ்தம்பித்து நின்றனர். பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி அடித்த 600வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பார்சிலோனா அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இரண்டாம் கட்ட அரை இறுதியில் பார்சிலோனா அணி கோல் ஏதும் அடிக்காமல் பார்த்துக் கொள்வதுடன், லிவர்பூல் 4 கோல் போட்டால் தான் பைனலுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளது. இதனால் பார்சிலோனா  தரப்பு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது. மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : FC Barcelona ,Messi , FC ,Barcelona, Messi's ,600th ,goal
× RELATED கில், மோர்கன் பொறுப்பான ஆட்டம் கிங்ஸ் லெவனுக்கு 150 ரன் இலக்கு