×

நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் கால் இறுதியில் எச்.எஸ். பிரணாய்

ஆக்லாந்து: நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் தகுதி பெற்றார்.ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 13வது ரேங்க் வீரர் டாமி சுகியர்டோவுடன் (இந்தோனேசியா) நேற்று மோதிய எச்.எஸ்.பிரணாய் (26வது ரேங்க்) 21-14, 21-12 என்ற நேர் செட்களில்  வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

அடுத்து கால் இறுதியில் ஜப்பான் வீரர் கன்டா சுனியமாவின் சவாலை பிரணாய் எதிர்கொள்கிறார். முன்னதாக, சீன வீரர் லின் டானுடன் மோதிய இந்திய நட்சத்திரம் சாய் பிரனீத் 12-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மனு ஆத்ரி - சுமீத் ரெட்டி ஜோடி 17-21, 19-21 என்ற நேர் செட்களில் மலேசியாவின் கோ வி ஷெம் -  டான் வி கியோங் ஜோடியிடம் போராடித் தோற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prannoy ,New Zealand Open Badminton , New Zealand, Open Badminton ,quarter, Prannoy
× RELATED கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் தங்க...