×

வாழ்வா... சாவா? போராட்டத்தில் இன்று கிங்ஸ் லெவனுடன் கேகேஆர் மோதல்

கொல்கத்தா: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கட்டாய வெற்றி என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் இன்று களமிறங்குகின்றன.நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் அணிகளாக  கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் இருக்கின்றன. காரணம் இந்த 2 அணிகளின் கேப்டன்களும் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோர்  உள்ளனர். தொடக்கத்தில் இரு அணிகளும் வெற்றிகளைக் குவித்ததால் பிளேஆப் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் இந்த அணிகளுக்கு தோல்விகள் தொடர்கதையாகின.

ஒரு கட்டத்தில் கேகேஆர் தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல் பஞ்சாப் அணிக்கும் வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்தாலும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும்  தோற்றுள்ளது. இரு அணிகளும் 12 போட்டியில் 10 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. வெற்றி பெறும் அணி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்; தோற்கும் அணி லீக் சுற்றுடன் மூட்டையை கட்ட வேண்டியிருக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.இரு அணிகளும் 24 முறை மோதியுள்ளதில், கொல்கத்தா 16 முறையும் பஞ்சாப் 8 முறையும் வென்றுள்ளன. நடப்பு தொடரில்  மோதிய முதல் லீக் போட்டியில் கொல்கத்தா  28 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,clash ,KERR ,protest ,Kings Levan , Life, death?,fight, KKR
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...